ஆண் !

பெண்ணாய் பிறகாதவன்
எல்லாம் ஆண் !

பிறக்கும்போது
XX சேராமல்
XY சேர்ந்தவன்
எல்லாம் ஆண் !

கருவுறுதல் பெண்மை
கரு உருவாக்குதல் ஆண்மை !

கரு உருவாக்கும் தன்மை
இல்லாதவனும் ஆணாக முடியும்
எண்ணத்தால்
திண்ணத்தால்
நடத்தையால்

பெண்மையை
அடக்கி
ஒடுக்கி
ஆழ்பவன்
ஆணா ?

பெண்மையை
காத்து
அரவணைத்து
ஆராதிப்பவன்
ஆணா ?

எது ஆண்மை ?